சிறுமியை கடத்தி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த இருவர் கைது

குறித்த சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடத்தி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த இருவர் கைது

பதுளை லுனுகல, உடகிருவ வனப்பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரு  சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டு, உடகிருவ வனப்பகுதியில் 08 நாட்களாக சிறுமியை மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த  சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.