இந்தியாகுற்றம்

சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த தாத்தா

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா. இவருக்கு 66 வயதாகிறது.இதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார்.

சிறுமியை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் முகமது தாத்தாவுக்கு சபலம் ஏற்பட்டு வந்துள்ளது.

அதனால் இதை மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க அவருக்கு விருப்பமில்லை. உடனே ஒரு லவ் லெட்டர் எழுதினார். “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு ஓகே வா” என்று விஷயத்துக்கு வந்தார்.

அந்த லெட்டரை கொண்டுபோய் சிறுமியிடம் தந்தார். அந்த சிறுமியோ அதை எடுத்து கொண்டு போய் அவரது அம்மாவிடம் தந்துள்ளார்.

அவரது அம்மாவோ மொத்த சொந்தக்காரர்களையும் வரவழைத்து லட்டரை காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தாத்தாவை சந்தித்து கண்டித்துள்ளனர். ஆனால் தாத்தா அதை காதிலேயே வாங்கவில்லை..

திரும்பவும் சிறுமியை சந்தித்து, “நான் தந்த லட்டருக்கு என்ன பதில்?” என்று கேட்டு மிரட்டி உள்ளார். அவர் மிரட்டிவிட்டதால் பயந்துபோன சிறுமி வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார். வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த சிறுமியின் பெற்றோர், மகளிர் பொலிஸாரிடம் புகார் தந்தனர்.. இந்த புகாரை விசாரித்ததில், சிறுமியை மிரட்டியது உண்மை என்று தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், கொத்தாக கொண்டு போய் முகமது தாத்தாவை சிறையில் வைத்துள்ளனர் காவல்துறையினர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close