சிறுமிக்கும் சிறுவனுக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை!

மதுரையில் 6 வயசு சிறுமிக்கும், 8 வயசு சிறுவனுக்கும் ஒரே நேரத்தில் இளைஞன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த வில்லா புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு இரும்பு பட்டறையில் பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, இரும்பு பட்டறை மூடப்பட்டது. இதன் காரணமாக, அவர் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில், சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்த அந்த 6 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் பாலசுப்ரமணியன் வீட்டில் வந்து விளையாடி உள்ளனர்.

அப்போது, பாலசுப்ரமணியம் வீட்டிலும் யாரும் இல்லாத நிலையில், அந்த 6 வயது சிறுமிக்கும், அந்த 8 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வலி தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருவரும் வீடு திரும்பி உள்ளனர். நடந்த விடயத்தை குழந்தைகள் கூற, இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய் அங்குள்ள திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் பாலசுப்ரமணியனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஓரினச்சேர்க்கை

“ஓரினச்சேர்க்கை நண்பனுடனும் மனைவியாக இருக்க வேண்டும்” மிரட்டிய கணவன்

Next Article
பாலியல் பலாத்காரம்

29 வயது இளைஞனால் 65 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
4
Share