சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு… 3 நாட்களில் அதிர்ச்சி!

0

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தார் விக்னேஸ்வரன் (வயது 24) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், கோயம்புத்தூரை சார்ந்த 17 வயது சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறவே, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதியன்று சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த விடயம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர்.

இது குறித்த விசாரணையில், விக்னேஸ்வரன் சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததும், திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.

சிறுமியை மீட்ட காவல் துறையினர், விக்னேஸ்வரனின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதேவேளை, சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவர் ரமேஷ் (வயது 33) எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகின்றார்.

அவரும் கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி, தனக்கு திருமணம் முடிந்துள்ளதை மறைத்து, சிறுமியை வடவள்ளி பகுதியில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கோவை மாநகரில் 3 நாட்களாக 3 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x