Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை : முன்னாள் ஜனாதிபதி

இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை கையாளப்படுபடுவதுடன் வடக்கு – கிழக்கு தமிழர்களை கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கு கிழக்கில் இளைஞர்களுக்கு இராணுவம் நெருக்கடிகளையும், தொல்லைகளையும் கொடுத்து வருவதாக அங்குள்ள மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பௌத்தம் என கூறிக்கொண்டு நாட்டின் அடிப்படையை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாகவும் நாட்டில் சகல மக்களுக்குமான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. நாட்டின் நல்லிணக்கத்தை உருவாக்க எனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன்.

எனினும் யுத்தம் நிலவிய காரணத்தினால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனது. இன்றைய ஆட்சியாளர்கள் நல்லிணக்கம் குறித்து எந்தவித சிந்தனையும் இல்லாது வேலைத்திட்டங்களை கைவிட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த அரசியல் அமைப்பை ஐக்கிய தேசிய கட்சி தடுக்காது ஆதரித்திருந்தால் இன்று எமது நாட்டின் நிலைமையே மாறியிருக்கும்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுகின்றதுடன் இவற்றிற்கான தீர்வுகள் வெகு தொலைவில் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x