சாத்தான்குளம் கொலை வழக்கு; அலறல் சப்தம் நிற்க விடாமல் விடிய விடிய தாக்கிய பொலிஸார்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் நெஞ்சைப் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றப்பத்திரிகையின் மூலம் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்திரவதை பற்றி அம்பலமாகியுள்ளது.

“ஜூன் 19-ம் திகதி இரவு 7.30 மணியளில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல்துறை கைது செய்தது. காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து இருவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர்.

இருவரையும் மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் கொடூரமாக காவலர்கள் அடித்துள்ளனர். இருவரையும் திமிறவிடாமல் 3 காவலர்கள் பிடித்துக் கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர்.

தந்தையையும் மகனையும் மாறி மாறி காவலர்கள் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட 2 பேரையும் காவல்துறை கொடூரமாக தாக்கியுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் காயங்களில் இருந்து சிந்திய ரத்தத்தை இருவரையுமே துடைக்கக் கூறி காவலர்கள் அடித்துள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடனேயே ரத்தத்தை தங்கள் உடையாலேயே 2 பேரும் துடைத்துள்ளனர்.

ஜூன் 19-ம் திகதி இரவில் தொடங்கி விடிய விடிய 2 பேரின் அலறல் சப்தம் நிற்க விடாமல் காவலர்கள் தாக்கியுள்ளனர். இரண்டு பேரின் ரத்தமும், காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது.

காவல்துறை அடித்ததில் கொட்டிய ரத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடைகள் ஈரமாகிவிட்டன. சிதறிக் கிடந்த ரத்தத்தை துடைத்ததால் உடைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்துவிட்டது.

மருத்துவமனைக்கு 2 பேரையும் அழைத்து சென்றபோது முதல்முறை உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். மாஜிஸ்திரேட் முன் 2 பேரையும் ஆஜர் செய்யும் முன்பும் 2 பேரின் உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர்.

காவல் நிலையத்தில் சிதறிக்கிடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தத் துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க காவல்துறை முயன்றுள்ளது.”என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
விசேட நாடாளுமன்ற அமர்வு

இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்படுகின்றது

Next Article

தொற்றாளர் எண்ணிக்கை நாட்டில் உயர்வு

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
3
Share