”சமந்தா அழகில்லை”: பூஜாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதா?

0

தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நாயகியான பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா தொடர்பான மீம் ஒன்றை பகிர்ந்து “இவர் எனக்கு அழகாக தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது சமந்தா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. பூஜா ஹெக்டேவுக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் தனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் பூஜா ஹெக்டே.
அதில், தனது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், கடந்த ஒரு மணி நேரத்தில் பகிரப்பட்ட, இயக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி சமந்தாவின் பதிவும் நீக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜா ஹெக்டே சமந்தாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென பதிவிட்டு வருகின்றனர்.

#PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நடிகை சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதி என்பதை குறிப்பதை போல தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x