இந்தியாகுற்றம்

சந்தேகம் முற்றியதால் மனைவியின் கொன்ற கணவன்!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் சமது, அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி 26 வயதான நிஷா பானு, ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அப்துல் சமதுவை 2 வதாக நிஷா பானு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்பு நிஷா பானு, தனது நண்பர்களுடன் அலைபேசியில் தொடர்ந்து பேசி வந்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இருவருக்கம் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மனைவி மீது சந்தேகம் அடைந்த அப்துல் சமது, மனைவியைக் கண்காணிக்கும் பணியில் இறங்கினார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பணி முடிந்து அப்துல் சமது, இரவில் வீடு திரும்பிய போது நிஷா பானு வேறு யாருடனோ தனது அலைபேசியில் பேசி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, கணவர் வந்த உடன், அலைபேசியை திடீரென துண்டித்துள்ளார். இது குறித்து மீண்டும் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்த சண்டையின் போது, நிஷா பானுவின் செல்போனை கணவனர் அப்துல் சமது கேட்டுள்ளார்.

அவர், அதை தர மறுக்கவே, கடும் ஆத்திரம் அடைந்த அப்துல் சமது, அருகில் இருந்த குக்கரை எடுத்து அவரின் தலையில் ஓங்கி கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், நிஷா பானு ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

சிறுது நேரத்தில் நிதானத்திற்கு வந்த அப்துல் சமது, தான் செய்த கொடூரத்தை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் தவித்துள்ளார். பிறகு, அங்கிருந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்று அவர் சரண் அடைந்தார்.

ஆனால், இந்த சம்பவம் நடந்தது திருப்பூர் தெற்கு காவல் நிலையம் என்பதால், அவரை தெற்கு காவல் நிலையத்தில், அந்த காவல் நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close