சண்டே மாமா.. மீனு வாங்கிட்டு வா: தமிழ் கற்கும் ஸ்ரீரெட்டி

;தமிழ் லீக்ஸ்’ மூலம் தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்து வரும் ஸ்ரீரெட்டி, தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.

அதையடுத்து சில தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தமிழ் திரை பிரபலங்களை டார்கெட் செய்துள்ள ஸ்ரீரெட்டி முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை சுமத்தி வருகிறார்.

தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டி சென்னையில் முகாமிட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து நியாயம் கேட்க திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற தமிழில் டப்ஸ்மேஷ் செய்வது, தமிழ் கற்பது என பல முயற்சிகளில் ஸ்ரீரெட்டி இறங்கியுள்ளார். ’சண்டே மாமா.. பிரஷ் பண்ணிட்டு .. மீன் வாங்கிட்டு வா.. நா சமைச்சி தரேன்’ என தமிழில் போஸ்ட் போட்டுள்ளார்.

மேலும், நாளை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து ஊடகங்களுக்கும் ஸ்ரீரெட்டி அழைப்புவிடுத்துள்ளார். ஆதரவளித்த சென்னைக்கு நன்றி எனவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
bIGG bOSS

பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் நபர் இவர்தான்!

Next Article
இன்ஸ்டாகிராம்

இனி இன்ஸ்டாகிராமில் ஒன்லைனில் இருப்பவர்களை கண்டுபிடிக்க முடியும்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share