Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்தால், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறலாம் என அவர் திட்டமிட்டிருந்தார். அவரது திட்டப்படியே போட்டி சென்றது.

முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 23 பந்துகளில் 32 ரன்களை அடித்த படிக்கல் ரஸல் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆனார்.

கடைசி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற கோலிக்கு பேட்டிங் செட்டாகவில்லை. 28 பந்துகளை சந்தித்த அவரால் 33 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 194 ரன்களை குவித்திருந்தது.

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி மட்டும் 4 ஓவர்களுக்கு 25 ரன்களை கொடுத்திருந்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரிக்கொடுத்திருந்தனர்.

195 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட சுப்மான் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் டாம் பாண்டான் 12 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.

64 ரன்களுக்கு கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் ஆண்ட்ரிவ் ரஸல் மற்றும் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். இசுரு உதானா வீசிய 14வது ஓவரின் முதல் 3 பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ், பவுண்டரி என ரஸல் அடிக்க பெங்களூர் அணிக்கு லேசாக அச்சம் வந்தது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்காதது பின்னடைவாகது அமைந்தது.

நிறைய கேட்ச்களை தவறவிட்டிருந்தாலும், சிறப்பான பந்துவீச்சு எனும் ஒற்றை ஆயுதத்தால் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x