கொலை சம்பவம் தொடர்பில் 8 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர்

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி பின்வத்த ஹோட்டலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மலசலகூட குழியில் வீசப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பான பிரதான சந்தேகநபர் 8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம்

எம்பிலிபிட்டிய செவனகல பிரதேசத்தில் இவர் பதுங்கியிருந்த போது பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் அப்போது ஹோட்டல் முகாமையாளராக பணியாற்றியவர். குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதையடுத்து  பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.