Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனா வைரஸ் தொற்று கொசுக்களால் பரவுமா? ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று கொசுக்களால் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உண்மை வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயால் இதுவரை உலகில் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6,00,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் அதேவேளையில் நோய் பரவுவதற்கான வழிகளை கண்டறியும் பணிகளிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காற்றின் மூலம் கொரோனா பரவும் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொசுக்களின் மூலம் வைரஸ் பரவுமா என என்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதில் கொசுக்களின் மூலம் கொரோனா பரவுவதற்கான சாதியக்கூறுகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வறிக்கையை பிரபல நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தமாக சேகரிக்கப்பட்ட 277 மாதிரிகளை வைத்து சோதனை செய்ததில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு சாதாரண மனிதரை கடித்தாலும் அது வைரஸ் பாதிப்பை உண்டாக்காது என தெரியவந்துள்ளது.

மேலும் தீவிரமான நிலைமைகளிலும் கூட கொரோனா வைரஸ், கொசுக்களின் மூலம் பரவாது என்பது நிரூபனம் ஆகியுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்