Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 கொரோனா தொற்றாளர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டதுடன், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதுபற்றி துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்திய ராஜ்கோட் காவல்துறையினர் 5 மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையை நடத்தி வரும் கோகுல் லைப்கேர் தனியார் நிறுவன தலைவரான டாக்டர் பிரகாஷ் மோதா, விஷால் மோதா மற்றும் டாக்டர் தேஜஸ் கரம்த் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இந்த மூன்று பேர் தவிர தேஜஸ் மோதிவராஸ் மற்றும் திக்விஜய்சின்கா ஜடேஜா ஆகிய 2 பேர் உள்பட 5 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news