Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் எத்தனைப் பேருக்கு அனுமதி?

பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்பின் மரணத்தை முன்னிட்டு பிரிட்டனில் 8 நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதோடு, இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் அடுத்த சனிக்கிழமை இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

துக்கம் அனுஷ்டிக்கப்படும் காலத்தில் பிரிட்டிஷ் மகாராணியார் எந்தவொரு அரச கடமைகளிலும் ஈடுபட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்ஸர் காஸ்ட்ல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதிச் சடங்குகள் செயின்ட் ஜோர்ஜ் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

பிரிட்டன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கில் 30 பேரே கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர்களைத் தீர்மானிப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரச குடும்பத்தில் 100 க்கு அதிகமான உறுப்பினர்கள் இருக்கும் போது, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய இறுதிச் சடங்குக்கு 30 பேரைத் தெரிவுசெய்ய வேண்டியேற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அபாயத்தில் இளவரசரின் இறுதிச் சடங்குகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து மகாராணி, உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரிட்டிஷ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியுமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இளவரசர் பிலிப்பின் மரணத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருவதோடு, பாக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே அனுதாபக் குறிப்புக்களை பதிவுசெய்வதற்கான குறிப்பேடு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x