Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன் பாக்டீரியா தொற்று மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண், கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், நிமோனியா மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்