இந்தியா

கொடூர கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கியதால் மனமுடைந்த பெண் தெலங்கானா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

பெண்ணின் பெற்றோர் வெளியிட்ட இந்தத் தாக்குதல் வீடியோவில், செல்லப்பிராணியான நாய் தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா லஹாரி.

இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரலு என்பவருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணமானது.

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்ட லாவண்யா, கணவன் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகப் பதிவிட்டிருந்தார்.

வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது மகளை அவள் கணவர் தாக்கிய சிசிடிவி வீடியோவை லாவண்யாவின் பெற்றோர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் வெங்கடேஷ்வரலு, மனைவி லாவண்யாவைக் கடுமையாக தாக்குகிறார். அப்போது அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி நாய் அந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்கிறது.

கணவன் மிகவும் கொடூரமாக தாக்கியதால் தனது வயிற்றிலை கையை வைத்தபடி அழுதுகொண்டே லாவண்யா செல்வது போன்ற அந்த சிசிடிடி கேமராவில் வீடியோ பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வரலுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close