வன்புணர்வு

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட தூக்கி வீசப்பட்ட பெண்

கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா அடுத்துள்ள ஹரோவா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துக் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, பெண் மாயமான அடுத்த சில நாட்களில், அந்த பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், சாலையோரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனை, அந்த பகுதியைச் சென்றவர்கள் பார்த்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டற்கான காயங்கள் மற்றும் தடயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்வாக, வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள மற்ற பழங்குடியினர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
பாலியல்

சொந்த தங்கையை பாலியல் தொழிலுக்கு விற்ற அண்ணன்

Next Article
இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை

தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் உயர்வு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
4
Share