இலங்கை

கூட்டணி தொடர்பான ஐந்தாம் கட்ட பேச்சு ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் – சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பான ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தையின் இன்று ஈடுபட்டுள்ளன.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இந்தப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளின் ஒரு கட்டமாக இந்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மார்ச் 14ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 21ஆம் திகதியும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியும் இடம்பெற்றிருந்தன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில்முக்கிய விடையங்களில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் மே மாதம் ஒன்பதாம் திகதி நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடல்களில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஸ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும், பொதுஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close