Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

குழந்தைகளைக் கவர மோகன்லால் போட்ட ஸ்பெஷல் திட்டம்!

நடிகர் மோகன்லால் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்திருக்கிறார்.

திரைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக, தயாரிப்பாளராக இருந்தவர் அடுத்தக் கட்டமாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மோகன்லால் இயக்க இருக்கும் படத்துக்கு ‘பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா’ஸ் ட்ரெஷர்’ (Barroz: Guardian of D’Gama’s Treasure) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

என்ன சிறப்பு என்றால், இந்தப் படம் 3டியில் உருவாக இருக்கிறது. அதோடு, இந்தப் படத்தில் மோகன்லால் நடித்தும் இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மோகன்லாலுடன் ப்ரித்விராஜூம் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இவர்களோடு, ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega, Rafael Amargo இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான துவக்கவிழா கொச்சியில் நடைபெற்றது. இதில், மோகன்லால் கலந்து கொண்டு பேசும் போது, “நான் நடிகனாகவோ, இயக்குநராகவோ ஆவேன் என்பதைப் பற்றி நான் நினைத்ததே இல்லை.

ஆனால், சினிமாவே எனது வாழ்க்கையும் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது. இப்போது பாரோஸ் மூலம் சினிமாவில் இயக்குநராக எனது புதிய பயணத்தைத் துவங்கியிருக்கிறேன். உங்களுடைய ஆதரவும் ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு துணை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x