Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

‘குளத்தைக் காணவில்லை’ … நடிகர் வடிவேல் பாணியில் முறைப்பாடு

நகைச்சுவை நடிகரான வடிவேல், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, ‘கிணற்றைக் காணவில்லை’ என முறைப்பாடு செய்வார்.

அதேபோல், ‘குளத்தைக் காணவில்லை’ எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்துள்ளார்.

அதன்பின்னர், அக்குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இது தொடர்பில். தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, குறிப்பிட்ட இடத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாதென பிரதேச செயலகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி நபர், குளக்கட்டை இடித்து தரைமட்டமாக்கிஇ குளத்தையே காணாமல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x