Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

குசல் மெண்டிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வாகன விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தினால் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் குறித்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கட் வீரர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குசல் மெண்டிஸின் காரில் மோதி உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குவதற்கு அவர் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்