காற்று மாசு

காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறப்பு – அதிர்ச்சி தகவல்

இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் உயர் ரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, உணவுமுறை அபாயங்களுக்கு அடுத்தபடியாக அதிகம்பேரை கொல்லும் வியாதியாக காற்று மாசு இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

தற்போது ‘ஸ்டேட் ஆப் குளோபல் ஏர்’ என்கிற அமைப்பு காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு (2019) உலகில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி 2 நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

children,air pollution,india,state of global air ,குழந்தைகள், காற்று மாசுபாடு, இந்தியா, உலகளாவிய காற்றின் நிலை

உலகம் முழுவதும் 60 லட்சத்து 70 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

காற்று மாசு அதிகம் பாதிப்பது ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப்பகுதிகள் என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள், சகாரா பகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் உள்பட உலகம் முழுவதும் 4 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள், பிறந்த ஒரே மாதத்தில் காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.

இந்த இறப்புக்கு, வீட்டில் கிளம்பும் சமையல் புகையும் முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்க பணிப்பு

Next Article

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை

Related Posts
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Read More

முதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL)T20 கிரிக்கெட் தொடரில் ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இரண்டு…
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan
Read More

இன்றைய ராசிபலன் 27.11.2020

இன்றைய ராசிபலன் 27.11.2020 மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில…
Total
3
Share