Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.

தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் ரேணு தேசாய். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.

பவன் கல்யாண் ஜோடியாக, பத்ரி, ஜானி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இஷ்க் வாலா லவ் என்ற மராத்தி படத்தைத் தயாரித்து இயக்கினார்.

பவன் கல்யாணுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டார். சில படங்களில், பவன் கல்யாணின் காஷ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பின்னர் பவன் கல்யாணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ரேணு, இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி பின்னர் அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

அவருக்கு நடிகர் பவன் கல்யாண், ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை மறுத்த ரேணு, நான் என் சொந்த பணத்தில் வீடு வாங்கியிருக்கிறேன், யாரும் எனக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் காதல் பற்றி கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த ரேணு தேசாய் கூறியதாவது: காதல் வெற்றியடையும் போது இனிமையானதாக இருக்கிறது. தோல்வி அடையும்போது அது கொடுமையான கனவாக மாறிவிடும்.

வாழ்க்கையில், காதல் என்பது ஒரு பகுதி மட்டுமே. மொத்த வாழ்க்கையுமே காதலில் மட்டும் இல்லை. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனால் காதல் தோல்வி அடையும்போது தற்கொலை போன்ற அவசர முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம். அந்த வேதனைகளையும் கடந்து வரவேண்டும்.

யாராவது ஒருவர் உங்களைத் தூக்கி எறியும்போது, ஏற்படுகிற வலியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வரவேண்டும்.

நானும் அதுபோன்ற காதல் துரோகத்தை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த வலியில் இருந்து வெளியேற முடியும். இவ்வாறு ரேணு தேசாய் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news