காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் கடந்த ஐந்து வருடங்களாக பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் கடந்த ஐந்து வருடங்களாக பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். 

இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் திகதி இவர்களது திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களது திருமணம் ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்துள்ளது. 

இந்த திருமணத்திற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

மேலும் புகழ்-பென்சியா திருமண வரவேற்பு செப்டம்பர் 5ஆம் திகதி நடைபெறும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புகழ்-பென்சியா திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.