காசாவின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலி

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 7 குழந்தைகள் உட்பட 21 பேர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களின் முழு விபரங்கள் குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.