Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கள்ளக்காதலி தற்கொலை.. காதலன் தேடிக்கொண்ட சோகமுடிவு…

சென்னை கிழக்குத் தாம்பரம் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் 37 வயதான ராபர்ட், திருமணம்மாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில்,கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

தாம்பரம் அஸ்தினாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34 வயதான தனலட்சுமி கணவனை பிரிந்து 17 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

ஒரே பகுதியை சேர்ந்து குடும்பத்தை பிரிந்து வாழும் ராபர்ட், தனலட்சுமி இருவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான பழக்கம் கள்ளக்காதலாக வளர்ந்துள்ளது.

ஒருகட்டத்தில் தனலட்சுமி வீட்டிலையே ராபர்ட் தங்கி ஒரே குடும்பமாக வாழத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் தனலட்சுமிக்கு வெறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.

எப்போது போனில் ஆண் நண்பருடன் பேசும் தனலட்சுமியை ராபர்ட் கண்டித்துள்ளார். இதனால் காதல்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலடைந்த தனலட்சுமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தான் கொடுத்த தொல்லையால்தான் தனலட்சுமி தற்கொலை செய்துகொண்டார் என்று சோகத்தில் இருந்துள்ளார் ராபர்ட். கடந்த சனிக்கிழமை இரவு தனலெட்சுமி வீட்டிற்கு ராபர் வந்துள்ளார்.

வீட்டின் கதவு காலைவரை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ராபர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

உடலை மீட்ட சிட்லபாக்கம் காவல்துறையினர் உடற்கூராய்விற்காக சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x