கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

குறித்த பகுதியில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரண்டு அல்லது 03 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவை தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

Colombo, September 16

காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸை வரையில் சேவையில் ஈடுபடும் ரயில் இன்று அதிகாலை கொல்லுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டமையினால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரண்டு அல்லது 03 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவை தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில் தண்டவாளத்திற்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று அதிகாலை 5.10 அளவில் மாத்தறை நோக்கி பயணிக்கவிருந்த ரயில் தாமதம் அடைந்துள்ளதாக கொழும்பு கோட்டை ரயில் நிலைய கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.