வாழ்க்கை

கருப்பு கோடுகளை எப்படி மறைக்கலாம்?

பொதுவாக பெண்கள் அணியும் உள்ளாடையான பிரா காரணமாக, கருப்பு கொடுக்கல் இருக்கும். உள்ளாடைகளை அணியும் இடத்தில், இக்கருப்பு கோடுகள் இயல்பாக ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

பிராவின் அழுத்தம் காரணமாக தோள்பட்டையில் மேல் பகுதி, முதுகு பகுதி, மார்பகத்தின் கீழே அல்லது சுற்றிலும் இக்கருப்பு கோடுகள் இருக்கும். பிராவினால் ஏற்பட்ட அழுத்தத்தில் உருவான கருப்பு கோடுகள் சில பெண்களுக்கு பிடிக்காது. இதனை நீக்க முயற்சி செய்வார்கள்.

இயற்கையான முறையில் மற்றும் எளிய வழிகளில் இந்த கருப்பு கோடுகளை நீக்கிவிடலாம். ஒரு தே.கரண்டி எலுமிச்சை சாறில் சில துளிகள் தேனை கலந்து, கருப்பு கோடுகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

நமது சருமம் இந்த கலவையை உறிஞ்சும் வரை சிறிது நேரம் காயவிட்டு, பின்னர் நீரினால் கழுவினால் கருப்பு கோடுகள் மறையும்.

ஆரஞ்சு பழத்தின் தோலினை வெயிலில் காய வைத்து, பொடியாக்கிய பின்னர், ஆரஞ்சு பொடியில் தேனை கலந்து பேஸ்ட்டாக மாற்ற வேண்டும். பின்னர் கருப்பு கோடுகள் மீது பூசி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு தே.கரண்டி கடலை மாவுடன், 10 மில்லி எலுமிச்சை சாறை சேர்ந்து பேஸ்டாக மாற்றியும் கருப்பு கோடுகள் உள்ள இடத்தில் போட்டு, சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

இதனைப்போன்று, முட்டையின் வெள்ளைக்கருவை சர்க்கரை கலவை, வெள்ளரி மற்றும் கற்றாழை கலவை, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் போன்றவையும் கருப்பு கோடுகளை அகற்ற உதவும்.

மிகவும் டைட்டாக இருக்கும் பிராக்களை அணிவது அல்லது பயன்படுத்துவது நல்லதல்ல. இது கருப்பு கோடுகளுக்கு வழிவகை வகை செய்வது மட்டுமல்லாது, தோலுடன் தேய்ந்து மார்பக பகுதிகளில் புண்களை ஏற்படுத்துதவும் வாய்ப்புள்ளது.

சரியான அளவுள்ள மற்றும் பாதிப்பை ஏற்படுத்தாத உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிவது சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close