Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கரடி தாக்கி உயிர்பிழைத்த சிறுவன்

அமெரிக்கா: Yellowstone தேசியப் பூங்காவில் குடும்பத்தோடு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கரடி தாக்கியதில் அவனுக்குக் காயங்கள் ஏற்பட்டது.

“கிரிஸ்லி” (grizzly) வகையைச் சேர்ந்த பெண் கரடி அதன் குட்டியுடன் காட்டில் உணவு தேடிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

புதர்களிலிருந்து வெளிப்பட்ட கரடி, சிறுவனை நோக்கித் தாக்கத் தொடங்கியதும், சிறுவன் பெற்றோரை நோக்கி ஓடினான். அவனைத் துரத்திச் சென்ற கரடி சிறுவனைக் கீழே தள்ளியது.

கரடியிடமிருந்து மகனைக் காப்பாற்ற பெற்றோர் அதன்மீது மிளகுத் தூளைத் தெளித்தனர்.

சம்பவத்தில், கையிலும், பின்புறத்திலும் காயங்களுடன் சிறுவன் உயிர்பிழைத்தான்.

குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்ததாலும், கரடியை எதிர்ப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததாலும் சிறுவன் உயிர்தப்பியதாகப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரடி தன் குட்டியைப் பாதுகாக்கும் நோக்கில் சிறுவனைத் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கரடிகள் தாக்கும் சம்பவங்கள் எப்போதாவது மட்டுமே நடப்பதால், அந்தக் கரடியைத் தேடும் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்று கூறியது Yellowstone தேசிய பூங்கா.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு கரடித் தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதன்முறை.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்