Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கனடா நாட்டு உயர்ஸ்தானிகரின் கிழக்கு மாகாண சந்திப்புகள்

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னின், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகிய இருவரையும், காத்தான்குடி, பீச்வே ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (16) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், “கனடா நாட்டுத் தூதுவர் இப்பிரதேசத்தின் நிலமை குறித்து, எங்களிடம் கேட்டறிந்து கொண்டார். முக்கியமான சில விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டன.

“கனடாவுக்கும் கிழக்கு மாகாணத்துக்குமான குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டதுக்குமான அபிவிருத்திப் பணிகளுக்கு கனடா எவ்வாறு உதவி செய்ய முடியுமென கலந்துரையாடினோம்” என்றார்.

மேலும், கனடா உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமொன்றை மட்டக்களப்பில் அமைத்து தரவேண்டுமெனத் தான் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும், மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம், வளங்கள், மக்களின் சனத்தொகை, வாழ்வாதாரம், தொழில், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைப்படுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இம்மாவட்ட மக்களின் அடையாளப்படுத்தப்பட்ட பிரதான தேவைகள் தொடர்பாகவும் கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news