கேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும்.
இதன் காரணமாக, அவர்களுக்கு உடலில் எல்லா பகுதியிலும் முடிகள் கொட்டும்.
இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் தலையை முழுவதுமாகக் மொட்டையடிக்க வேண்டியிருக்கும்.
அது நோயினால் ஏற்பட்ட துன்பத்தை விட, அவர்களுக்கு பல மடங்கு மன உளைச்சலையும் வேதனையும் கொடுக்கும்.
இப்படி ஒரு நிலையில், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கத்தையும் அளிக்கமுடியும்.
இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான ஆற்றலையும் நம்பிக்கையையும் கொடுக்கும், ஒரு கண்கலங்கவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு தாய், கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு மொட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியுடன் அதனை பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.
அப்போது, தன் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சற்றும் தயங்காமல் தனது தலையையும் மொட்டையடிக்கத் தொடங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் கண்கலங்கிய நிலையில் நின்ற இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
ட்விட்டரில் இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
No One Fights Alone: This mother surprises daughter who has cancer by shaving off her own hair in solidarity…. nothing stronger than a mother’s love 😭❤️. pic.twitter.com/6UpKU9sbCg
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) January 26, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:
கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.