Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீராடிய நிலையில் கடல் கல்மலையில் சிக்கிய நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news