உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

வேலூரில் உள்ள ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் சத்துவாச்சாரி மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று நடத்தினர்.

அதில் இரு வீட்டினரும் கலந்து கொண்டனர். காலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் அந்த ஹோட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவருந்தினர்.

அப்போது ஒருவரது இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி இருந்ததால் அவர்கள் வேலூரில் உள்ளள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓட்டல் நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காததை தொடர்ந்து பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

சசிகலாவின் விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது

Next Article

14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா... அப்படி என்ன விசேஷம்?

Related Posts
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Total
6
Share