கமல்ஹாசன்

ஒழுகியது மழை நீரா, ஊழலா?- கமல்ஹாசன் கேள்வி

வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக அளவில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

திண்டுக்கல்லில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் அரசுப்பேருந்து தமிழக அரசால் புதியதாக மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டது. இதன் மேற்கூரை சேதமடைந்ததால் மழை நீர் ஒழுகியது.

இதில் பயணிகள் குடை பிடித்தபடி அமர்ந்து சென்றனர். ஓட்டுநர் மழையில் நனைந்தபடியே வாகனத்தை இயக்கிச் சென்றார். இதைப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் அலைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

உள்ளே ஒழுகியது மழை நீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?” என கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

6 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த கும்பல்

Next Article
கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Read More

முதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL)T20 கிரிக்கெட் தொடரில் ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இரண்டு…
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan
Read More

இன்றைய ராசிபலன் 27.11.2020

இன்றைய ராசிபலன் 27.11.2020 மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில…
Total
0
Share