திருமலை திருப்பதி

ஒரே நாளில் திருப்பதியில் ரூ.1 கோடி வசூல்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிக வருமானம் உண்டியல் மூலம் கிடைத்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் மூலம் வருவாய் கிடைக்கிறது.

கொரோனா தொற்று காலங்களில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் ‘இ – உண்டியல்’ மூலம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினர்.

தற்போது ஏழுமலையானை தரிசித்து செல்லும் பக்தர்கள் குறைவாக இருந்தாலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 ஆயிரத்து 349 பேர் ஏழுமலையானை தரிசித்தனர்.

அவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ‘ஊரடங்கிற்கு பின் ஆரம்பித்த தரிசனத்தில் ஏழுமலையானுக்கு கிடைத்த முதல் பெரிய வருமானம் இது’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலையில் இம்மாதம் 19 முதல் 27ம் திகதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. அதற்காக செப். 15ம் திகதி ஏழுமலையான் கோவிலை சுத்தப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே செப். 15 மற்றும் செப். 19 முதல் செப். 27ம் திகதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஜெயபிரகாஷ் ரெட்டி

பிரபல நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.. திரைத்துறையினர் அதிர்ச்சி

Next Article

முதலில் சீன வீரர்கள் தான் சுட்டனர்: இந்தியா பதிலடி

Related Posts
Read More

10 நாட்களுக்கு திருமலையில் சொர்க்க வாசல் திறக்க முடிவு

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
3
Share