ஒரே ஒரு அழைப்பு மூலம் ரூ.9 லட்சத்தை மோசடி செய்த கும்பல்..!

இப்போதெல்லாம் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலை விட இணையத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது. பணபரிவர்த்தனைகள் இணைய உலகுக்குள் வந்தபின்னர் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நேரம் மிச்சம் ஆகியுள்ளது.

அதேவேளையில் இணையத்தில் ஏமாற்றுக்காரர்களின் கைகளிலும் சிக்கியுள்ளது. பயனாளர்கள் மிகக்கவனமாக இருந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.

நாக்பூரில் ஒரே தொபேசி அழைப்பு மூலம் ரூ.9 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் என்பவரின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது அசோக்கின் அலைபேசியை அவரது 15வயது மகன் பயன்படுத்தியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்.

உங்கள் அப்பாவின் அலைபேசியில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய செயலியானது வேறொரு இடத்தில் இருந்து அலைபேசியை இயக்கும் ரிமோட் செயலி.

செயலியை பதிவிறக்கம் செய்தவுடனேயே அலைபேசியில் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்மகும்பல்.

இது குறித்து அசோக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி தொடர்பாக புகாரை பதிவுசெய்துள்ள காவல்துறையினர் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

இந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ரொம்ப கவனமாக இருக்க வேண்டுமாம்

Next Article

இந்த 3 ராசிக்காரங்க ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்காம்...!

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
4
Share