காட்டு தீ

ஒரு வாரத்தில் மலையகத்தில் 7 இற்கும் மேற்பட்ட காட்டு தீ சம்பவங்கள்!

ஹட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்று (13) காலை 9 மணியளவிலேயே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகின.

தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள் , உயிரினங்கள் ,உட்பட மருந்து மூலிகைகள் ஆகிய அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது வறட்சியான காலநிலை மலையகப்பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சமபவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.

எனவே இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயப்படுமாரும,; காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாரும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் ஹட்டன், பொகவந்தலாவ, எல்ல ,கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ பரவியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க

தொழிலாளர் குடும்பத்தை வெளியேற்றும் விவகாரம் - இ.தொ.கா - எஸ்.பி கடும் வாக்குவாதம்

Next Article
சஜித் பிரேமதாச

யானை சின்னத்தை மாற்ற ரணில் விதித்துள்ள நிபந்தனை

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
3
Share