இந்தியா

ஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை

பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ் கிடைக்க கிடைக்காத விரக்தியிலும் நபர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி தனியார் சாயப்பட்டறை கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த வருடம் ரோஜா என்பவருடன் கல்யாணம் நடந்தது. ரோஜா சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்..சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானார். அதனால் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்தநிலையில் பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் கடுமையான விரக்தி இருந்த அவர், கடந்த 20ஆம் திகதி இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது. அப்போதாவது மனைவியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டா்.

அதுவும் நடக்கவில்லை என்பதால், மனம் உடைந்த விக்கி, வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று காலை ரோஜாவுக்கு பிரசவ வலி வரவும் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் குடும்பத்தினர் அனுமதித்துவிட்டு, விக்குக்கு போன் செய்தனர்..

அப்போது அவர் போன் எடுக்காததால், நண்பருக்கு போன் செய்து என்ன ஏதென்று பார்க்க சொன்னார்கள்.

அந்த நண்பர் வந்து பார்த்த பிறகுதான், விக்கி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக சிவ காஞ்சி பொலிசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.

பிரசவத்தின்போது, தன் கூடவே இருக்க வேண்டும் என்று ரோஜா ஆசைப்பட்டு சொல்லிகொண்டே இருந்தாராம். அதைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்பது தான் விக்கிக்கு தாங்க முடியாத சோகத்தை தந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close