அரசியல்இலங்கை

ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டார் அகில

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து செயற்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகொத்தவில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் அமைப்பாளர்களுடன் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும், ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி கட்சியின் மாநாட்டை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில விராஜ்காரியவசம் கூறினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியை பாதுகாத்ததை போன்று, இந்த முறையும் கட்சியை பாதுகாத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close