Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர்.. வீட்டிற்கு வந்த பார்சலை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு ஐபோன் வடிவிலான டேபிள் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் கடும் வைரலாகிவருகிறது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐபோன் என்றால் அவ்வளவு ஆசை. எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருந்த அவருக்கு வலைத்தளம் ஒன்றில், மிக மிக குறைந்த விலைக்கு லேட்டஸ்ட் மாடல் ஐபோன் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்துள்ளது.

அந்த விளமபரத்தை பார்த்த அந்த இளைஞர் உடனே ஆர்டர் செய்துவிட்டார். இதனை அடுத்து எப்போது தான் ஆர்டர் செய்த ஐபோன் வரும் என காத்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்துள்ளது.

தான் ஆர்டர் செய்த ஐபோன் தான் வந்துள்ளது என, ஆசையாக சென்று பார்சலை பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அந்த பார்சல் அவரது உயரத்திற்கு இருந்துள்ளது. சரி உள்ளே என்னதான் இருக்கு என பார்த்த அவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக, ஐபோன் வடிவிலான டேபிள் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பின்னர்தான் அந்த இளைஞருக்கு தெரியவந்துள்ளது, தான் ஆர்டர் செய்தது ஐபோன் இல்லை என்றும், அது ஒரு ஐபோன் வடிவிலான டேபிள் என்றும். இந்த சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x