ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி, இரண்டு லீக், மூன்று சுப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது.

இதில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடியிருந்தார்.

அத்துடன், ரோகித் சர்மா ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ஓட்டங்களை குவித்தார்.

இதேவேளை, இந்தப் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் நீடிப்பதுடன், 342 ஓட்டங்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிப்பதுடன், குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், பந்து வீச்சாளர்களில் 2வது இடத்தையும், சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

டிராமி சூறாவளியால் 50 பேர் காயம்

Next Article
தங்க பாளங்கள்

தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
0
Share