Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு

எதிர்வரும் பொது தேர்தலுக்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்று வரும் இந்த நிகழ்வில் கூட்டணியின் பங்காளி கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோக ணேஷன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஹூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், அரவிந்த குமார், வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

எனினும் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் பொது தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தொடர்ந்தும் ஆராயப்படுகிறது.

அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் அது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு திருத்தத்தினை கூட்டணியின் யாப்பிற்குள் உள்ளீடு செய்து அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த யாப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரிக்கும் பட்சத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மீண்டும் செயற்குழுவை கூட்டி ஆராயவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x