ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ்

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6, 6-7, 6-2, என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது அரையிறுதி குழுவிற்கு முதல் வீரராக டெய்லர் ஃபிரிட்ஸ் முன்னேறியுள்ளார்.

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ்

ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிறீன் பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் மோதினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6, 6-7, 6-2, என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது அரையிறுதி குழுவிற்கு முதல் வீரராக டெய்லர் ஃபிரிட்ஸ் முன்னேறியுள்ளார்.

ஆண்கள் பிரிவில் முன்னணி டென்னிஸ் வீரர்களுக்கிடையில் நடைபெறும் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர், இத்தாலியின் டுரின்- பாலா அல்பிடூரில் உள்ள உட்புற கடின தரையில் நடைபெற்று வருகின்றது.

எட்டு வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில், கிறீன் மற்றும் ரெட் என இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.