எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவின் கூடாரங்கள்

லடாக் கிழக்கு பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ஜூன் 22 அன்று இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்தியாவும் சீனாவும் லடாக்கில் உள்ள அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் பரஸ்பரம் பின்வாங்க ஒப்புக் கொண்டன.

ஆனால் தற்போது, கால்வான் பள்ளத்தாக்கின் புதிய செயற்கைக்கோள் படங்கள் கால்வான் ஆற்றின் கரையில் கருப்பு கூடாரங்களை காட்டுகின்றன.

இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்.ஏ.சி) பகுதிக்கு அருகே உள்ளது. இப்பகுதியில் 9 கிலோமீட்டருக்குள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏறத்தாழ 16 முகாம்கள் இருப்பதையும் அவை காட்டுகின்றன.

பிளானட் ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட புதிய படங்கள் ஜூன் 25 மற்றும் ஜூன் 26 திகதியிடப்பட்டுள்ளன.

இப்படங்களில் கால்வான் ஆற்றின் குறுக்கே இந்தியப் படைகளால் கட்டப்பட்ட கல் சுவர் ஒன்று சேதமடைந்திருப்பதை காண முடிகின்றது. மேலும், இந்தப்படங்களில் இந்திய ராணுவ முகாம்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

கால்வான் பள்ளத்தாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 9 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள 16 சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) முகாம்கள்.

இந்தியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய கட்டுமான பணிகள் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் அருகில் சீன ராணுவத்தின் புல்டோசர்கள் கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதையும், ஆற்றின் போக்கினை மாற்றுவதையும் முந்தைய படங்கள் தெளிவாக விளக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
லுனுகம்வெஹர

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 8 பேர் காயம்

Next Article

உயிருக்கு உயிராக காதல்.. உயிரை விட்ட சிறுமி

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
0
Share