Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

‘எரிந்த நீர்’!..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..!

கன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது.

இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்து சோதித்து பார்த்தார். அப்போது தண்ணீர் கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கோபியின் வீட்டுக்கு சென்று பெட்ரோல் கலந்த தண்ணீரை பார்க்க கூடினர்.

இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபியின் வீட்டின் அருகே தமிழக பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது.

இங்கு பெட்ரோல் சேமிப்பு கலன் பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கலனின் சேதம் ஏற்பட்டு பெட்ரோல் கசிந்து கோபியின் வீட்டு குடிநீர் கிணற்றில் ஊறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதுபோல் அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல குடிநீர் கிணற்றிலும் பெட்ரோல் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால், உடல்நல பாதிப்பு உட்பட பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x