இலங்கைவீடியோ

எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் விமானப் படையின் புதிய தளபதியாக நியமனம்

எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை இன்று காலை அவர் பெற்றுக்கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக இணைந்த சுமங்கல டயஸ், கொழும்பு நாளந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

இதேவேளை, இன்றுடன் ஓய்வுபெறும் எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நேற்று முதல் அமுலாகும் வகையில் எயார் ஷீப் (Chief) மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close