வெளிநாடு

‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி, தம்மை இளவரசர் என்ற பட்டத்தைக் கூறி அழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்காட்லந்தில் சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோர் கலந்துகொண்ட கருத்தரங்கில் பேசியபோது ஹரி, அவ்வாறு தெரிவித்தார்.

ஹரி தமது பயணத் திட்டங்கள் குறித்துக் கருத்தரங்கில் அறிவித்தார்.

ஹரியும் அவரது மனைவி மேகனும் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகி, அதன் பட்டங்களை விடுத்து, தனி வாழ்க்கைத் தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இருப்பினும், அரச குடும்பத்தின் மதிப்புக்குரிய பட்டங்களை அவர்கள் அடுத்த மாத இறுதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close