என்னுடைய மிகப்பெரிய ஆசை இதுதான்... மனந்திறந்த நிதி அகர்வால்

தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனுஷ் உடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை என தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு தனுஷ் உடன் நடிக்க வாய்ப்பு மட்டும் கொடுத்தால் போதும் சம்பளமே கேட்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். நிதி அகர்வால் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் விரைவில் நிதி அகர்வால் தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.