என்னடா லாஜிக் இது.. பிக் பாஸை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் 4ல் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் விதத்தை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். அதன் மூலமாக தான் போட்டியாளர்கள் திறமைகள் என்ன என்பது மற்ற போட்டியாளர்களுக்கு தெரிய வரும். போட்டியாளர்கள் எவ்வளவு நாள் வீட்டில் இருக்க போகிறார்கள் என்பது மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் பழகும் விதம் பொறுத்து தான் அமையும். போட்டியாளர்கள் கன்பெக்ஷன் ரூமுக்குள் சென்று இரண்டு பேரை நாமினேட் செய்வார்கள்.

ஆனால் தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் இந்த இடத்திற்கு வர அவர்கள் செய்தது பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை பற்றி பேசினார்கள்.

இன்று வெளிவந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் ‘கடந்து வந்த பாதை’ டாஸ்கில் போட்டியாளர்கள் சொன்ன கதையில் சரியில்லாத நான்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வு செய்வதாக பிக் பாஸ் அறிவித்தார்.

அதில் சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, சம்யுக்தா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ‘என்ன லாஜிக் இது?’ என கேட்டு வருகிறார்கள்.

போட்டியாளர்கள் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை என்பதற்காக அவர்களை நாமினேட் செய்வீர்களா என கோபத்துடன் கேட்டு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கஷ்டமாக எதுவும் நடக்காததற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வருகிறாரார்கள்.

ஒருவர் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கிறது என்பதற்காக அதை இன்னொருவர் வாழ்க்கையோடு ஒப்பிடுவது தவறு என்றும் கூறி வருகிறார்கள்.

வழக்கமாக போட்டியாளர்களை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் தற்போது பிக் பாஸ் டீமை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

நாமினேஷனுக்கு தேர்வான 4 போட்டியாளர்கள்.. பரபரப்பான முதல் ப்ரொமோ

Next Article

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு 2 மணிக்கு வெளியாகும் !

Related Posts
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Total
3
Share