எச்சில் தெறிக்கிறது.. சுரேஷ் சக்ரவர்த்தி – அனிதா சம்பத் இடையே வெடித்த சண்டை!

பிக் பாஸ் நான்காவது சீசன் துவங்கி இரண்டாவது நாளே மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது. போட்டியாளர்கள் இடையே இப்போதே மனக்கசப்பு மற்றும் சண்டை ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

சற்று முன் வெளிவந்திருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே கிச்சனில் சண்டை வெடித்திருக்கிறது. எச்சில் தெறிக்கிறது என பலமுறை கூறுகிறார்.

இது தொடர்பான வாக்குவாதம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மிகவும் காரசாரமாக நடக்கிறது. அனிதா சம்பத் மிகவும் கோபமாக இது பற்றி பேசிக்கொண்டிருக்க நடிகை ரேகா இடையில் வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி கடும் கோபத்தில் கத்துவதும் இந்த மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

குறும்படம் போட்டு காட்டுங்க என்ன அனிதா சம்பத் சொல்ல, அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி ‘குறும்படம் இல்லை நீளமான படம் கூட போட்டு காட்டுங்க என கோபமாக பேசிவிட்டு செல்கிறார்.

அதனால் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு பெரிய பிரச்சனையே இதனால் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இரண்டாவது நாளே இப்படி மாறி விட்டார்களே என்று ரசிகர்களும் அதிகம் சர்ப்ரைஸ் அடைந்திருக்கிறார்கள்.

இன்று மதியம் வெளிவந்த இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அனிதா சம்பத் தன்னுடைய அம்மா பற்றி மிக உருக்கமாக பேசியிருந்தது காட்டப்பட்டிருந்தது.

அப்படி கண்ணீருடன் பேசியது ஒருபுறமிருக்க தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் கிச்சனில் அனிதா சம்பத் சண்டை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

எமோஷ்னலாக பேசிய அனிதா சம்பத்! பிக் பாஸ் 2வது ப்ரொமோ

Next Article

விபத்தில் சிக்கியவர் பிறந்த தினத்திலேயே மரணம்; ஒரு வருடத்துக்கு முன்னர் சகோதரரும் பலி

Related Posts
அனுஷ்கா
Read More

அனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்

அனுஷ்கா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அனுஷ்கா நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான சைலன்ஸ்…
Read More

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தினை வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ்…
Read More

மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கினாலும்…
Total
3
Share